முடிவு செய்யுங்கள், முடிவு சொல்லுங்கள்: மதுரையை கலக்கும் ரஜினி ரசிகர்களின் போஸ்டர்கள்!

சினிமா நடிகர்களை அரசியலுக்கு வர சொல்லும் போஸ்டர் கலாச்சாரம் மதுரையில் இருந்து தான் தொடங்கும் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட தளபதி விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்கள் மதுரையில் தொடங்கி அதன் பின்னர் சென்னை வரை பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ரஜினியை மீண்டும் அரசியலுக்கு வர வழைக்கும் போஸ்டரை அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்த சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் அவர் எழுதியது போன்ற ஒரு கடிதம் சமீபத்தில் வைரல் ஆனது என்பதும் இந்த கடிதத்திற்கு ரஜினிகாந்த் விளக்கம் அளித்த போது அது தன்னுடையது கடிதம் இல்லை என்றாலும் தன்னுடைய உடல் நிலை குறித்து அதில் இருந்த தகவல்கள் உண்மை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை வைத்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று ஒரு பிரிவினர்களும், கண்டிப்பாக பிப்ரவரி மாதம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று இன்னொரு பிரிவினரும் வாத விவாதங்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் ரஜினி ரசிகர்கள் புதிய போஸ்டர்களை ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
வார்த்தையா? வாக்கா?
முடிவு செய்யுங்கள் தலைவா
முடிவு சொல்லுங்கள் தலைவா

என்று ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் இமயம்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அடுத்தகட்ட ஊரடங்கு இன்று முதல் தொடங்குகிறது என்றாலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது

இணையத்தில் வைரலாகும் 'சுல்தான்' நடிகையின் ஒர்க்-அவுட் வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடித்துவரும் 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து

பிக்பாஸ் வீட்டில் சுசித்ரா; அர்ச்சனாவுக்கு குருப்புக்கு ஆப்பு?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்று 28வது நாள் நடைபெற்று வரும் நிலையில் இன்று பாடகர் வேல்முருகன் வெளியேறுகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

எவிக்சன் குறித்து ஆஜித்திடம் கேள்வி கேட்ட கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்ட 11 பேர்களில் சனம், பாலாஜி, ரியோ, சோம்சேகர் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நேற்று காப்பாற்றப்பட்ட நிலையில்

கொரோனாவுக்கு பலியான தமிழக அமைச்சர்: இன்று சொந்த ஊரில் இறுதிச்சடங்கு!

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை