இது சட்டத்திற்கு புறம்பானது: ரஜினிக்கு பீட்டா அமைப்பு கடிதம்

  • IndiaGlitz, [Friday,January 05 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே அவரது ரசிகர்கள் இதனை ஒரு கொண்டாட்டமாக கொண்டாடி வருகின்றனர். இந்த வகையில் மதுரை ரஜினி ரசிகர்கள் ஒரு படி மேலே போய் வரும் 7ஆம் தேதி மதுரை அழகர்கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்தனர்

இந்த நிலையில் கோவிலில் கிடா வெட்டுவது சட்டத்திற்கு புறம்பானது என்று பீட்டா அமைப்பு ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனையடுத்து ரஜினியின் அறிவுரையின்படி வரும் 7ஆம் தேதி அழகர்கோவிலில் கிடா வெட்டு இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் விருந்து உண்டு என்றும் மதுரை ரஜினி ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.

இதே பீட்டா அமைப்புதான் கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அதிகளவில் விமர்சிக்கப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.