கொரோனா அறிகுறியுடன் இருந்த முதியவரை பிணவறை அருகே தூக்கி வீசிய பொதுமக்கள்

சளி இருமலுடன் இருந்த சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவரை மதுரையில் உள்ள பொதுமக்கள் அரசு மருத்துவமனை அருகில் உள்ள பிணவரை அருகே தூக்கி வீசி சென்ற கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் காலில் புண் இருந்தால் வீட்டை விட்டு வெளியேறி மதுரை வரை சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு கட்டத்தில் சுயநினைவின்றி பிளாட்பாரத்தில் மயங்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு சளி இருமல் ஆகியவை இருந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை தூக்கி அருகில் உள்ள அரசு மருத்துவமனை அருகே உள்ள பிணவரை அருகே தூக்கிவீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.

இது குறித்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலானதை அடுத்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை ரெட்கிராஸ் நிர்வாகிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு அதன் பின்னர் காய்ச்சல் சளிக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் விசாரித்த போது அவர் சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் டெய்லர் முகமது என்றும் அவரது வயது 60 என்றும் தெரிய வந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு பக்கம் மனிதநேயம் இன்றி பொதுமக்கள் அவரை தூக்கி வீசிச் சென்ற நிலையில் இன்னொரு பக்கம் மனித நேயத்துடன் ரெட்கிராஸ் நிர்வாகிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா நேரத்தில் ரமலான் நோன்பு: மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்???

கொரோனா பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள மசூதிகள் பூட்டப்பட்டுள்ளன.

இதற்குமுன் தோன்றிய உலகளாவிய தொற்றுநோய்கள்!!! விரிவான தொகுப்பு!!!

பொதுவாக தொற்று நோயின் அளவைக் குறிக்க சில குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

நாளைய முழு ஊரடங்கில் திடீர் திருப்பம்!

சென்னை, மதுரை, கோவை, உள்பட 5 நகரங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் இதனை அடுத்து நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை

இன்று மட்டும் பிற்பகல் 3 மணி வரை கடைகள் செயல்படும்: சென்னை மாநகராட்சி

சென்னை, மதுரை, கோவை உள்பட 5 நகரங்களில் நாளை முதல் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 26 வரை 29 வரை அத்தியாவசிய தேவைக்குரிய கடைகள்

மருத்துவர் சைமன் மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை மாநகராட்சி

சமீபத்தில் கொரோனாவால் மரணம் அடைந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவசர அவசரமாக அவரது நண்பர் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி  மத வழக்கப்படி