நீங்க பாலாபிஷேகம் பண்ணுங்க, அவன் பாலூத்திட்டு போக போறான்.. மதுரை முத்து கவலை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீங்கள் பாலாபிஷேகம் பண்ணுங்க, அவன் பாலூத்திட்டு போகப் போறான் என மதுரை முத்து வீடியோ ஒன்றில் மிகவும் வருத்தமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திருப்பூரில் வட இந்திய இளைஞர்கள் தமிழ் இளைஞர்களை விரட்டி விரட்டி அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தமிழகத்திற்கு வேலை கேட்டு வந்த வட இந்தியர்கள் தற்போது தமிழக இளைஞர்களை அடித்து விரட்டும் அளவுக்கு அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றும் மதுரை முத்து அந்த வீடியோவில் எச்சரித்துள்ளார்.
நமது தமிழக இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும், நீங்கள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டே இருந்தால் அவர்கள் உங்களுக்கு பாலூத்திட்டு போயிடுவான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பூரில் தற்போது 65% வட இந்தியர்கள் தான் இருக்கிறார்கள், அவர்கள் இங்கே ரேஷன் கார்டு வாங்கி, இங்கேயே செட்டில் ஆகிட்டு விட்டார்கள், இப்படியே போனால் வீட்டுக்கு வீடு இன்ஜினியர்கள் இருக்கும் தமிழர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் காவல் துறையினர் கூறிய போது, ‘ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பேருக்கு இடையே டீ சாப்பிடும்போது வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பின்னர் பிரச்சினை வந்தது, இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை, இந்த சம்பவம் குறித்து யாரும் காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் தொழில் போட்டியோ, முன்விரோதமோ எதுவும் இல்லை, தற்செயலாக ஏற்பட்ட பிரச்சனை தான், தமிழர்களை வட இந்தியர் விரட்டுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com