மதுரை முத்துவின் முதல் மனைவி.. இதுவரை யாரிடமும் சொல்லாத விஷயம்!

மதுரை முத்துவின் முதல் மனைவி குறித்து இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு விஷயத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

எப்போதும் நகைச்சுவையாக பேசி மக்களை சிரிக்க வைக்கும் மதுரை முத்து, சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலக்கியுள்ளார்.அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர், குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.

அதுமட்டுமின்றி இவர் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்பதும், பல பட்டி மன்றங்களில் இவர் நடுவராகவும் இருந்துள்ளார் என்பதும், இவருடைய காமெடி தமிழ் மக்களை இப்போதும் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரை முத்து, லேகா என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். லேகா கடந்த 2016 ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது முதல் மனைவி ஏற்கனவே திருமணமாகி குழந்தை உடன் இருந்தவர் என்றும் அவரது கணவர் அவரை விட்டுவிட்டு சென்று விட்டதால் தான் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் இதுவரை யாருக்கும் தெரியாது என்றும் முதன்முதலாக தற்போது தான் சொல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முதல் மனைவியின் மரணத்திற்கு பிறகு மனைவியின் நெருங்கிய தோழியான நீத்து என்ற பல் டாக்டரை மதுரை முத்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ட்ரோன் மூலம் படமாக்கப்படும் 'சூர்யா 42': வைரல் புகைப்படம்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 42' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது

சிம்புவின் 'பத்து தல' ரிலீஸ் தேதி இதுவா?

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக

'வாரிசு' படத்தின் ரிலீஸ் உரிமையையும் வாங்கிய ரெட் ஜெயண்ட்: கோலிவுட்டில் பரபரப்பு

வரும் பொங்கல் தினத்தில் தளபதி விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் தல அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தை படத்தின் தமிழக ரிலீஸ்

நம்பர் ஒன் விஜய்யா? அஜித்தா? ரெண்டு பேருமே இல்லை.. திருப்பூர் சுப்பிரமணியன்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ நேற்று, 'தமிழ்நாட்டை பொறுத்தவரை விஜய்தான் நம்பர் ஒன் என்றும் வசூல் அளவில் அவருடைய படங்கள் அஜித் படங்களை விட அதிகமாக வசூல்

சன்னிலியோன் நடித்த தமிழ்ப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சன்னி லியோன் நடித்த தமிழ் திரைப்படமான 'ஓ மை கோஸ்ட்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.