உன்னை போல் தோழர் நாங்கள் கண்டதிலே.. மதுரை மண்ணின் மைந்தர் சு. வெங்கடேசன் பிரச்சார பாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி வேட்பாளராக சு.வெங்கடேசன் அவர்கள் போட்டியிடும் நிலையில் அவரது பிரச்சார பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாராளுமன்றத்தில் அவர் முழங்கிய காட்சிகள், மதுரை தொகுதி மக்களுக்காக அவர் செய்த பணிகள் ஆகியவை இந்த பிரச்சார பாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உன்னை போல் தோழர் நாங்கள் கண்டதிலே
பெருமிதம் நெஞ்சில் கொண்டோம்
நீங்கள் செல்லும் பாதையில் உடன் வரும்
துணை நிற்கும் என்றும் எங்கள் கூட்டம்
உரிமைகள் மறுக்கும் பெரும் முதலைகள் முன்னால்
மலைகளை தகர்க்கும் ஆயுதம் போலவே
உங்கள் குரல் ஒலிக்கும்
என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது தமிழக வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த தலைவர், சிறந்த பாராளுமன்ற எம்பி, மதுரை மண்ணின் மைந்தர், சிறந்த எழுத்தாளர், சமூக அக்கறை கொண்ட சு. வெங்கடேசன் மீண்டும் மதுரை தொகுதியில் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com