சேலம் விவசாயிக்கு பொருத்தப்பட்ட மதுரை நபரின் இதயம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சேலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவருக்கு மதுரையில் மூளைச்சாவு அடைந்த நபர் ஒருவரின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த 36 வயதான மோகன பெருமாள் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தார். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது இதயம் தற்போது சேலம் மோகன பெருமாளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மோகன பெருமாளின் மனைவி கூறுகையில், சேலம் ரேலா மருத்துவமனையின் மருத்துவர்கள் எங்களுக்கு செய்த உதவிக்கு மிகவும் நன்றி உள்ளவர்களாக இருப்போம். டாக்டர் மோகன் மற்றும் பிரேம் ஆகியோர் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தனர். அதன் காரணமாக இன்று என் கணவருக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது.
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மதுரை நபரின் இதயம் தற்போது சேலத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com