மனைவியுடன் கள்ளக்காதல்: உயிர் நண்பனின் உயிரை எடுத்த வழக்கறிஞர்!

  • IndiaGlitz, [Sunday,October 11 2020]

மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த உயிர் நண்பனை வழக்கறிஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் என்பவர் தனது உயிர் நண்பர் சாக்ரடீஸ் என்பவர் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்கு மதுரை நீதிமன்றம் வந்த போது தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் சாக்ரடீஸுக்கு மது அருந்த கொடுத்ததாக தெரிகிறது

மது அருந்தியபின் போதையில் இருந்த செந்தில் தனது நண்பரான சாக்ரடீஸிடம் என் மனைவியிடம் நீ கள்ளத் தொடர்பில் இருந்தாய் என்றும் என் மனைவி என்னைவிட்டு பிரிவதற்கு நீ தான் காரணம் என்றும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது

இதனை அடுத்து சாக்ரடீசை வழக்கறிஞர் செந்தில் அடித்துக் கொலை செய்துள்ளார். அதன்பின் அவர் தனது நண்பர் சையது ஜாபர் என்பவருடன் சேர்ந்து சாக்ரடீஸ் உடலை ஆட்டோவில் ஏற்றி வைகை ஆற்றங்கரையில் உடலை வீசி எறித்திருக்கிறார்கள்

இந்த நிலையில் வைகை ஆற்றங்கரையில் பிணம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து அந்தப் பிணத்தை கைப்பற்றி அவர் சாக்ரடீஸ் தான் என்பதை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் இதுகுறித்த விசாரணையில் இறங்கிய போது அவரது உயிர் நண்பர் செந்தில் மற்றும் அவரது நண்பர் சையது ஜாபர் தான் இந்த கொலை செய்தனர் என்பதை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர். மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்ததால் உயிர் நண்பரை வழக்கறிஞர் செந்தில் அடித்தே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

More News

தமிழ் கலாச்சாரம், பண்பாட்டுக்கு எதிரான படங்கள் தடை செய்யப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆபாச படம் எடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் 'தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு எதிரான திரைப்படங்கள் தடை செய்யப்படும்'

ஓட்டு போடறதுக்கு முன் யோசிங்க: பிக்பாஸில் அரசியல் பேசிய கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த மூன்று வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் அவ்வப்போது இடையிடையே மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசியல் பேசி வருவது தெரிந்ததே.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் களமிறங்கும் பிரபலம்: பரபரப்பு தகவல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தல் வரும் நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்

தலைவியாய் கூட அல்ல; மனுஷியாய் மதிக்க வேண்டாமா?  வைரமுத்து ஆவேசம்

கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெண் ஊராட்சி தலைவர் ஒருவர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை நாற்காலியில் உட்கார வைக்காமல்

'தளபதி 65' படத்துடன் கனெக்சன் ஆன சிம்பு-சுசீந்திரன் திரைப்படம்!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதையும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது என்பதையும் பார்த்தோம்