'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை' இந்த நிகழ்ச்சியை கலாய்த்து பல மீம்ஸ்களும், ஜோக்குகளும் சமூக வலைத்தளங்களில் கடந்த பல ஆண்டுகளாக வலம் வருகின்றன. குறிப்பாக 'என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்களே' என்ற வசனம் திரைப்படங்களிலும் இடம்பெற்றது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியால் தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுவதாகவும், சட்டமும் நீதிமன்றமும் செய்ய வேண்டியதை ஒரு நடிகை செய்வதையும் எதிர்த்து விருதுநகரை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்தது.
நீதிமன்ற தடை குறித்து தனக்கு இன்னும் முழு தகவல் வெளிவரவில்லை என்பதால் இதுகுறித்து தன்னால் இப்போது எதுவும் கூற முடியாது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் எதுவும் பேச முடியாது என சேனல் தரப்பிலும் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments