'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை' இந்த நிகழ்ச்சியை கலாய்த்து பல மீம்ஸ்களும், ஜோக்குகளும் சமூக வலைத்தளங்களில் கடந்த பல ஆண்டுகளாக வலம் வருகின்றன. குறிப்பாக 'என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்களே' என்ற வசனம் திரைப்படங்களிலும் இடம்பெற்றது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியால் தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுவதாகவும், சட்டமும் நீதிமன்றமும் செய்ய வேண்டியதை ஒரு நடிகை செய்வதையும் எதிர்த்து விருதுநகரை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்தது.

நீதிமன்ற தடை குறித்து தனக்கு இன்னும் முழு தகவல் வெளிவரவில்லை என்பதால் இதுகுறித்து தன்னால் இப்போது எதுவும் கூற முடியாது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் எதுவும் பேச முடியாது என சேனல் தரப்பிலும் கூறியுள்ளனர்.

More News

யார் நீங்க? ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த தூத்துகுடி இளைஞர்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறவும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும்

'காலா' படத்திற்கு தடை: கொந்தளித்த விஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனையில் ரஜினியின் குரல் தமிழகத்திற்கு ஆதரவாக இருந்ததால் கன்னட அமைப்புகள்

போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பிரபலங்களின் ரியாக்சன்

தூத்துகுடியில் இன்று பேட்டியளித்த ரஜினிகாந்த், போராட்டம் செய்யும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவதால் கலவரமாக வெடிக்கின்றது

ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்: தூத்துகுடியில் ரஜினிகாந்த் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன். கருணாஸ்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும்வரை இனி திமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று திமுக நேற்று கூறிய நிலையில்