பள்ளிகள் திறப்பது எப்போது? மதுரை உயர்நீதிமன்ற கி்ளை கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அம்மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதால் மீண்டும் பள்ளிகளை மூட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தாலும் இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் தமிழக அரசு கருத்துக் கேட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ’பள்ளிகள் திறப்பதை டிசம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கலாம்’ என்று கருத்துக் கூறியுள்ளது. ஆந்திரா போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறந்ததால் ஏற்பட்ட நிகழ்வுகளை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் பள்ளி கல்லூரிகளை டிசம்பர் மாதத்திற்கு திறக்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது
ஏற்கனவே பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து, மதுரை உயர் நீதிமன்றமும் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியிருப்பதால் தமிழக முதல்வரின் இன்றைய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout