கமல்ஹாசன் மீதான நிலவேம்பு சர்ச்சை: மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,October 25 2017]

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு காயச்சல் படுவேகமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் டெங்குவை கட்டுப்படுத்தும் என்று கூறப்படும் நிலவேம்பு குடிநீர் தமிழகம் முழுவதும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  'சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்' என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டார். மேலும் இரண்டு நாட்கள் கழித்து 'நிலவேம்பு குடிநீரை தான் எதிர்க்கவில்லை என்றும், நிலவேம்பு குடிநீரை நம் நற்பணி இயக்கத்தினர் விநியோகிக்க வேண்டாம் என்றும் மட்டுமே தான் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் நிலவேம்பு குறித்து தவறான தகவலை கமல்ஹாசன் பரப்பி வருவதாக அவர் மீது மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் , 'நிலவேம்பு விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யலாம்' என்று மதுரை ஐகோர்ட் கிளை சற்றுமுன்னர் உத்தரவிட்டுள்ளது.