பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து: மோகன் ஜி-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Monday,September 30 2024]

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இயக்குனர் மோகன் ஜிக்கு, உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

’பழைய வண்ணாரப்பேட்டை’ ’திரௌபதி’ உள்பட சில படங்களை இயக்கிய மோகன் ஜி, சமீபத்தில் யூடியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார், ஆனால் சில மணி நேரத்தில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக வதந்தி பரப்பிய இயக்குனர் மோகன், மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்த தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதி செய்ய வேண்டும் என்றும், சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு தமிழ் ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

More News

ZEE5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் டிமான்ட்டி காலனி 2 : ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு..!

ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி படத்தின்

தமிழ் சீரீயலில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் நடிகை சுதா சந்திரன்.. எந்த சீரியல்? எந்த டிவி?

நடிகை சுதா சந்திரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சீரியலில் மீண்டும் இணைகின்றார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து திடீரென விலகும் கோபி.. காணாமல் போன இன்ஸ்டா பக்கம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாக்கியலட்சுமி" தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சதீஷ், அந்த தொடரில் இருந்து விலக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

'சோறு தான் எல்லாமே'.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் பிரியங்காவின் பதிவு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பிரியங்கா தனது சமூக வலைதளத்தில் "சோறு தான் எல்லாமே" என பதிவிட்டுள்ளார்.

விஜய்யை அடுத்து சூர்யா.. லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் சீரியல் டைட்டில் அறிவிப்பு..!

பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் நடிக்கும் புதிய சீரியலின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.