பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து: மோகன் ஜி-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இயக்குனர் மோகன் ஜிக்கு, உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
’பழைய வண்ணாரப்பேட்டை’ ’திரௌபதி’ உள்பட சில படங்களை இயக்கிய மோகன் ஜி, சமீபத்தில் யூடியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார், ஆனால் சில மணி நேரத்தில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக வதந்தி பரப்பிய இயக்குனர் மோகன், மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்த தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதி செய்ய வேண்டும் என்றும், சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு தமிழ் ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout