பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதோருக்கு அனுமதி இல்லை: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
- IndiaGlitz, [Tuesday,January 30 2024]
பழனி முருகன் கோவிலுக்குள் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என மதுரை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை கோயில் நுழைவு விதிகளில் இந்து மதத்தை சாராத யாரும் இந்த கோவிலுக்குள் நுழையக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்து கோவிலுக்குள் இந்து மதத்தை சாராதவர்கள் நுழைவதை தடுக்கும் விதத்தில் அந்த விதி ஏற்பட்டது.
ஆனால் சமீபத்தில் இந்து மதத்தை சாராதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை திடீரென பழனி முருகன் கோவிலில் அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கை இந்து மதத்தின் நம்பிக்கைகளை சீர்குலைக்க செய்கிறது, எனவே பழனி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த சில நாட்களாக விசாரணை இருந்த நிலையில் தற்போது முக்கிய உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவருக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதோர் கோவிலுக்கு நுழைய தடை என்ற பதாகையை கோயில் முன்பு வைக்குமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாத மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தரிசனம் செய்ய விரும்பினால் ’சாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்கிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்து விட்டு அதன் பிறகு கோவிலுக்கு செல்லலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.