'அடங்கமறு' படத்திற்கு எதிரான வழக்கில் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,December 27 2018]

ஜெயம் ரவி, ராஷிகண்ணா நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளியான 'அடங்கமறு' திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் வழக்கறிஞர்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் இருப்பதாக கூறி வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அடங்க மறு திரைப்படத்தில் வழக்கறிஞர்களை இழிவுப்படுத்தும் காட்சிகளை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜனவரி 2-ம் வாரத்திற்கு இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 2வது வாரம் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' வெளியாவதால் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளில் இருந்தும் 'அடங்கமறு' திரைப்படம் தூக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.