கருணாஸ் முன்ஜாமீன் மனு: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஆகியோர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு அதன்பின் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தேவர் பேரவை தலைவர் முத்தையாவின் காரை சேதப்படுத்திய வழக்கில் கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார் முயன்றதாக சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என கருணாஸ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எம்எல்ஏ கருணாஸுக்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கருணாஸ் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நக்கீரன் கோபால் கைது: கமல்ஹாசன் கண்டனம்

நிர்மலாதேவி விவகாரம் குறித்து நக்கீரன் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் தமிழக கவர்னர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டிருந்ததால்,

ஒவ்வொரு ஃபிரேமும் பல விஷயங்கள் பேசுகிறது: '96' குறித்து குஷ்பு

கடந்த வாரம் வெளியான விஜய்சேதுபதி, த்ரிஷாவின் '96' திரைப்படத்திற்கு நாலா பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

திருமணமான 10வது மாதத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் திருமணமாகி பத்தே மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த யோகிபாபு

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் இவர் நடிக்காத படங்களே இல்லை

அன்றே சொன்ன ரஜினி: டுவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக்

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.