500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுமி: 12 ஆண்டுகளுக்கு பின் பேஸ்புக்கால் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம்

  • IndiaGlitz, [Thursday,December 12 2019]

ஆந்திராவைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த 2007ம் ஆண்டு 500 ரூபாய்க்கு மதுரை பெண் ஒருவருக்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்கு பின், அவர் தனது சொந்த பெற்றோரை சந்தித்து நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது

கடந்த 2007ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவரது மகள் ஆதிலட்சுமி. இவர் 12 வயதில் திடீரென காணாமல் போயுள்ளார். அதன்பின் அவர் மதுரை பெண்மணி ஒருவருக்கு 500 ரூபாய்க்கு ஒருவரால் விற்கப்பட்டு உள்ளார்

500 ரூபாய்க்கு அந்த சிறுமியை வாங்கிய பெண் அந்த சிறுமிக்கு லதா என்று பெயர் வைத்து ஆசையுடன் வளர்த்து வந்தார். அதன் பின்னர் அவருக்கு உரிய வயதில் திருமணமும் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் வளர்ப்புத்தாய் திடீரென மறைந்த நிலையில், லதா தனது சொந்த பெற்றோரை தேடி விஜயவாடா சென்றுள்ளார்.

ஆந்திர அரசால் உருவாக்கப்பட்ட ஸ்பந்தனா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தனது பெயர் மற்றும் விபரங்களை குறிப்பிட்டு உள்ளார். இதனை பார்த்த லட்சுமிநாராயணன் 12 ஆண்டுகளுக்கு பின் தொலைந்த தனது மகள்தன் இந்த லதா வாக இருக்கும் என்ற சந்தேகத்தில் காவல் துறையை அணுகி உள்ளார்

காவல்துறையினர் லதா மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர்களை அழைத்து ரேஷன் கார்டு உள்பட மற்ற ஆவணங்களை சோதனை செய்ததில் லட்சுமிநாராயணன் மகள்தான் லதா என்ற ஆதிலட்சுமி என்பதை உறுதி செய்தனர். இருப்பினும் மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர் உரிய முறையில் லட்சுமிநாராயணன் அவர்களிடம் லதா ஒப்படைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

12 ஆண்டுகளுக்கு பின் தொலைந்து போன மகளை பார்த்த அவரது குடும்பம் லதாவை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி நெகிழ்ச்சியின் உச்சகட்டமாக இருந்தது.