கைலாசாவில் விவசாயம் செய்ய அனுமதி கேட்ட மதுரை விவசாயி: எங்க போய் முடியுமோ?
- IndiaGlitz, [Wednesday,August 26 2020]
இந்திய அரசால் தேடப்படும் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசா என்ற புதிய நாட்டை தோற்றுவித்துள்ளதாகவும், அந்நாட்டிற்கு தானே அதிபர் என்றும் சமீபத்தில் பிரகனப்படுத்தி கொண்டார். அந்நாட்டிற்கு என தனி ரிசர்வ் வங்கியை உருவாக்கி இருப்பதாகவும் தனி நாணயங்கள் அச்சடித்துள்ளதாகவும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
கொரோனா விடுமுறை காலத்தில் நித்தியானந்தாவின் இந்த ரசிக்கும் வகையிலான காமெடி வீடியோகளுக்கு இணையாக நெட்டிசன்களும் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் கைலாசா நாட்டில் ஓட்டல் தொடங்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டு இருந்தார். அதை சீரியசாக எடுத்துக் கொண்ட நித்தியானந்தா ’உங்களுக்கு கண்டிப்பாக ஓட்டல் தொடங்க அனுமதி அளிக்கப்படும். இது குறித்து எனது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன்’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் மதுரையை சேர்ந்த விவசாயி ஒருவர் ’தான் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருவதாகவும் உங்களுடைய கைலாச நாட்டில் விவசாயம் செய்ய விரும்புகிறேன் என்றும் அதற்கு அனுமதி கோருகிறேன்’ என்றும் லட்டர் எழுதியுள்ளார். இவர் எழுதிய லெட்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இல்லாத நாடு ஒன்றுக்கு ரிசர்வ் வங்கியும் நாணயத்தையும் உருவாக்கிய நித்தியானந்தாவிடம் ஹோட்டல் தொடங்கவும், விவசாயம் செய்யவும் நெட்டிசன்கள் அனுமதி கேட்டு கடிதம் எழுதி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு ’இது எங்கே போய் முடியுமோ’ என்ற புலம்பலும் நெட்டிசன்களிடையே உள்ளது.