திருநங்கைகள் துவங்கிய “டிரான்ஸ் கிச்சன்“… பொதுமக்கள் அமோக வரவேற்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருநங்கைகள், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக உணவகம் ஒன்றைத் துவங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் திறந்து வைத்த இந்த உணவகத்திற்கு முதல்நாளே மக்கள் அமோக வரவேற்பு அளித்ததோடு பாராட்டுகளைத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சமூகத்தால் ஓரங்கட்டப்படும் திருநங்கைகள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகத் தொடர்ந்து கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கும் சமூகத்தில் தக்க மதிப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்பிய திருநங்கைகள் சிலர் மதுரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தங்களது வீட்டிலேயே உணவை ஆர்டர் எடுத்து சமைத்து கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் உணவகம் திறக்க வேண்டும் என விரும்பி வங்கிகளில் கடன் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் அரசு வங்கிகள் திருநங்கைகளைக் கைவிட்ட நிலையில் தற்போது பல சமூகநல அமைப்புகளின் உதவியோடு மதுரை பகுதியில் புதிய உணவகம் ஒன்றைத் திறந்துள்ளனர். மேலும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அருகிலேயே இந்த உணவகம் அமைந்துள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக உணவு வழங்க உள்ளதாக அவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
வாழ்வாதாரத்திற்காகப் போராடும் திருநங்கைகள் உணவகம் திறந்து இருப்பது குறித்து கோரிப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளியிட்டு வரும் நிலையில் அவர்கள் நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்குகிறோம் எனக் கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரிதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout