'இரண்டாம் குத்து' டீசரை நீக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
- IndiaGlitz, [Wednesday,November 11 2020]
சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசரை உடனடியாக நீக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
’இருட்டு அறையில் முரட்டு குத்து 2’என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்த நிலையில் பாரதிராஜா உள்பட பல திரையுலக பிரபலங்கள் அந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டாம் குத்து படத்தின் டீசரை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
வசனங்கள், காட்சிகள், ஆபாசமான இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கின்றன என்றும், எந்தவித நாகரீகமும், நன்னெறியும் இன்றி படத்தின் காட்சிகள் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற காட்சிகளை அனுமதிக்க முடியாது என்றும், நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.