'ஜெயிலர்' படத்திற்கு இலவச டிக்கெட் மற்றும் விடுமுறை.. பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,August 05 2023]

மதுரையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ’ஜெயிலர்’ படத்தின் டிக்கெட்டை இலவசமாக கொடுத்துள்ளதோடு ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை என்று தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் திசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ’ஜெயிலர்’.

இந்த படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ’ஜெயிலர்’ படம் வெளியாகும் ஆகஸ்ட் 10ஆம் தேதி தனது பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்து இலவச டிக்கெட் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மேலும் சில நிறுவனங்கள் இதே போல் விடுமுறை அளித்து டிக்கெட் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அவர்களுக்கு நமது தாத்தா, நமது அப்பா, நமது ஜெனரேஷன் மற்றும் நமது மகன், பேரன் என ஐந்து தலைமுறையினர் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகும் நாளில் நமது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.