சிவ பெருமானின் கடும் கோபத்தால் தீ விபத்து: மதுரை ஆதீனம்
- IndiaGlitz, [Saturday,February 03 2018]
நேற்று நள்ளிரவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இங்குள்ள சுமார் 50 கடைகளில் 35 கடைகள் தீயினால் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தீவிபத்து குறித்து கருத்து கூறிய மதுரை ஆதினம், 'இந்த தீ விபத்து சிவபெருமான் - பார்வதியின் கடுமையான கோபத்தால் ஏற்பட்டுள்ளது. ஆலய நுழைவாயில் முதல் கருவறை வரை பணம் தான் பேசுகின்றது.
பள்ளிவாசலில் தரிசனம் செய்யும் முஸ்லீம்களுக்கு கட்டணம் கிடையாது, ஒரு கிறிஸ்துவ தேவாலயம் சென்று வழிபட கட்டணம் இல்லை. எனவே ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவை தமிழக அரசு இடவேண்டும். அதுமட்டுமின்றி இந்து சமய அறநிலையத்துறையை ஒழித்து கட்ட வேண்டும். அதனால் ஒரு பயனும் இல்லை' என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார்