மண்ணின் மனம் மாறாத 'மதுரவீரன்': டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Tuesday,January 02 2018]

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள 'மதுரவீரன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது படம் வருவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் வெளிவந்துள்ள இந்த டிரைலர் படத்தின் சிறந்த புரமோஷனாக கருதப்படுகிறது.

கிராமத்து ஆக்சன், கூர்மையான வட்டார வழக்கு வசனங்கள், அசர வைக்கும் ஜல்லிக்கட்டு காட்சிகள் என வெகு இயல்பாக படத்தின் காட்சிகள் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் வசனங்கள் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது, 'அப்பனுக்கு அப்புறம் பிள்ளை என்பது அரசியலுக்கு வேணும்ன்னா ஒத்துவரும், அம்புட்டுக்கும் ஒத்துவராது, மாட்ல எந்த வகை வண்டிக்கு, எந்த வகை வாடிக்குன்னு எனக்கும் தெரியும், எதிர்ல்ல வர்றது எமனா இருந்தாலும் எதிர்த்து நின்னு என்னடா உன் பிரச்சனைன்னு கேட்கணும், ஜல்லிக்கட்டுன்னு ஒரு விளையாட்டுன்னு மனுஷனுக்கு மட்டும்தான் தெரியும், மாட்டுக்கு என்ன தெரியும், ஆகிய வசனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன

மண்ணின் மனம் மாறாத ஒளிப்பதிவு, கிராமிய மணத்துடன் கூடிய பாடல், சண்முகப்பாண்டியனின் ஆக்ரோஷமான ஆக்சன் நடிப்பு, இடையே ஒரு மெல்லிய காதல், பாலசரவணனின் காமெடி, வில்லன்களின் தாக்குதல் ஆகியவை இரண்டு நிமிட டிரைலரில் அனல் பறக்கின்றது. குறிப்பாக ஸ்டண்ட் இயக்குனர் சாம், இயக்கிய சண்டைக்காட்சிகள் படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை கிராமிய கதைக்கு ஏற்றவாறு இருப்பதும் சிறப்பு. மொத்தத்தில் ஒரு பக்கா கிராமிய ஆக்சன் கதையை இயக்குனர் பி.ஜி.முத்தையா ஜல்லிக்கட்டு நடக்கும் பொங்கல் தினத்தில் விருந்தாக அளிப்பதால் இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது.

More News

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' சென்சார் தகவல்கள்

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு UA'  சான்றிதழ் அளித்துள்ளனர்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஜினி-கமல் சந்திப்பு

வரும் 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர்.

ஆன்மீக அரசியல் இங்கு எடுபடாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

திராவிட பாரம்பரியம் மிக்க மண்தான் நமது தமிழகம். திராவிடத்திற்கு மாற்றாக எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது இங்கு சாத்தியமில்லை. அதனால் ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் எதுவும் இங்கு எடுபடாது,

கன்னடர்கள்தான் கர்நாடகாவை ஆளவேண்டும் என்று கூறினாரா பிரகாஷ்ராஜ்?

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆளவேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தது.

'தளபதி 62' படத்தில் மீண்டும் 'மெர்சல் மேஜிக்!

'தளபதி 62' படத்திலும் தொடரும் என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்த நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் 'தளபதி 62' படத்தில் இணைவது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன