சூர்யா, விக்ரம் பட்டியலில் இணைந்த சண்முகப்பாண்டியன்

  • IndiaGlitz, [Thursday,December 14 2017]

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் 'மதுர வீரன்' படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 11 மணிக்கு இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்றுமுன்னர் 'மதுரவீரன்' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொங்கல் தினத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் தற்போது சண்முகப்பாண்டியனின் 'மதுர வீரன்' திரைப்படமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

உடுமலை சங்கர் கொலை வழக்கு திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் 'கேப்டன் பிரபாகரன்' முதல் 'தீரன் அதிகாரம் ஒன்று' வரை பல உண்மை சம்பவங்கள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டு அவை நல்ல வெற்றியும் பெற்று வருவதை பார்த்து வருகிறோம்

விஜய்யை அடுத்து சூர்யாவுக்கு கிடைத்த பெருமை

'தெறி திரைப்படம் ரிலீஸ் ஆனபோது முதல் நாள் முதல் காட்சி காணும் அனுபவத்தை பெண் ரசிகர்களுக்கும் வழங்கும் வகையில் முதன் முறையாக பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படும் முதல் நாள், முதல் காட்சி திரையிடப்பட்டது.

பலருக்கும் பசியாற்ற உதவியாக கஞ்சா கருப்பு பரிசளித்த ஆட்டோ..!

பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் தற்போது அவரது மனிதாபிமான செயல் ஒன்று வெளிவந்து அவருடைய மதிப்பை உயர்த்தியுள்ளது

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 'சங்கமித்ரா' படத்திற்கு விரைவில் தயாராகிறார்.

தீரன் பட பாணியில் ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்ட சென்னை காவல் ஆய்வாளர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்பு துலக்கிய மதுரவாயில் போலீசார்,