மீடூ விவகாரம்: மெட்ராஸ் மியூசிக் அகாடமி எடுத்த அதிரடி நடவடிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் மீடூ என்ற பாலியல் குற்றச்சாட்டு கடந்த ஒரு வருடங்களாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் இதை பரப்பிய பெருமை பாடகி சின்மயியை சேரும். வைரமுத்து மீது அவர் வைத்த பாலியல் குற்றச்சாட்டு வெறும் பரபரப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை, அதேபோல் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டை வெளியே சொல்ல வைத்தது.
இந்த நிலையில் கர்நாடக இசை பாடகர்கள் சிலர் மீது மீடூ குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மெட்ராஸ் மியுசிக் அகாடமி மார்கழி சீசனில் பாடும் ஏழு பாடகர்களுக்கு இனிமேல் அகாடமியில் பாட வாய்ப்பு அளிக்கபோவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கர்நாடக இசை பாடகர்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய செய்தியாகும்
ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் மார்கழி சீசனில் பாடி வந்த என்.ரவிகிரண், ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர்.ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகிய ஏழுபேர்கள் இனிமேல் அகாடமியில் பாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏழுபேர் மீது மீடூ குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout