மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி: அடுக்கடுக்கான தடைகளை தகர்க்கும் 'மெர்சல்'
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சனைகளை சந்திக்காமல் விஜய் படம் வெளியானது இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மெர்சல் படத்திற்கு 'டைட்டில் பிரச்சனை உள்பட பலவேறு தடைகள் ஏற்பட்டு அவை தகர்க்கப்பட்டும் வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ராஜேந்திரன் என்பவர் 'மெர்சல்' படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு காரணமாக 'மெர்சல்' டைட்டிலுக்கு சில நாட்கள் தடைவிதிக்கப்பட்ட நிலையில் அதன்பின்னர் டைட்டிலுக்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டு 'மெர்சல்' படத்தின் டைட்டிலுக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மெர்சலுக்கு ஏற்பட்டு வரும் ஒவ்வொரு தடையும் தகர்க்கப்பட்டு வருவதை அடுத்து இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com