பீப் பாடல் விவகாரம். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பீப் பாடல் விவகாரம் குறித்து கோவை காவல்நிலையத்தில் நடிகர் சிம்பு நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. எனவே நாளை சிம்பு கண்டிப்பாக ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் 'பீப் பாடலில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான பல வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக நாளை இருவரும் ஆஜராகவேண்டும் என்று ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் போலீசார் அனுப்பியுள்ள சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் சிம்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, 'இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், அதே நேரத்தில் இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும் அன்றைய தினம் போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout