நடிகர் சங்க கட்டிடம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
Tuesday, July 25, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக விஷால் அணியினர் பதவியேற்றதும், சங்கத்துக்கு என சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது. ரூ.26 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்த கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஸ்ரீரங்கன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அவரது மனுவில் நடிகர் சங்கத்தின் கட்டிடம் பொதுச் சாலையிலிருந்து 40அடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் நடிகர் சங்கக் கட்டடம் கட்ட தற்காலிகத் தடை விதித்தது.
இந்த வழக்கு இன்று மிண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'நடிகர் சங்கக் கட்டட கட்டுமானப் பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனால் நடிகர் சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த உத்தரவு வெளிவந்தவுடன் இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் சங்க செயலாளர் விஷால், 'எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தகர்த்தெறிந்து, நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments