'கபாலி'க்கு பின் 'சி 3' படத்திற்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி திரு. கல்யாண சுந்தரம் அவர்கள் சூர்யாவின் சி3 திரைப்படத்தை எந்த ஒரு இணைய தளத்திலும் யாரும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் வெளியிட கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதற்கு முன் இதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் நடிப்பில் கலைப்புலி s.தாணு தயாரிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தை யாரும் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இணைய தளத்தில் வெளியிட கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடதக்கது

More News

மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு

நேற்றிரவு சென்னை மெரீனாவில் முதல்வர் ஓபிஎஸ் கலைத்த மெளனம் அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலாக உருவாகியுள்ளது.

ஜெய்-அஞ்சலி காதலை வெட்டவெளிச்சமாக்கிய சூர்யா-ஜோதிகா

நடிகை ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் இயக்குனர் பிரம்மா இயக்கிய 'மகளிர் மட்டும்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது

தேர்தல் ஆணையம் அதிரடியால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகார்கள் குறித்து ஆராய்ந்த தேர்தல் ஆணையம் தற்போது அதிமுகவிடம் விளக்கம் கேட்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....

தேவையில்லாமல் எங்களை சீண்ட வேண்டாம். சசிகலாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அதிரடி நடவடிக்கைகளுக்கு திமுகதான் பின்னால் உள்ளதாக சசிகலா உள்பட அதிமுக தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்....

சூழ்ச்சி வலையில் விழுந்துவிட்டர் ஓபிஎஸ். வைகைச்செல்வன்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒருபக்கம் செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து பணியில் உள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்பது உள்பட பல அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் சற்று முன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர