ராஜீவ் வழக்கில் கைதானவர்களுக்கு, வீடியோ கால் பேச அனுமதி....!

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள், உறவினர்களுடன் வீடியோ காலில் பேச உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் தான் முருகன் மற்றும் நளினி. வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வருகிறார்கள். இவர்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் உறவுகளுடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொள்ள, உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அண்மையில் தன்னுடைய தகப்பனாரின் முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரிக்க, முருகனும் அவரது மனைவியும் பரோலுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் காவல்துறை இதற்கு அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள தங்கள் உறவினர்களிடம், முருகன் மற்றும் நளினி வீடியோ காலில் பேச அனுமதி தர வேண்டும் என்றும் நளினியின் தாயார் பத்தம்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதி கிருபாகரன், வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இன்று அமர்வுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து இருவரும் வெளிநாட்டில் உள்ள தாயார் மற்றும் சகோதரியுடன், தினமும் 10 நிமிடங்கள் வீடியோ காலில் பேசிக்கொள்ளலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.