கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானதை அடுத்து அவரது உடலை சென்னை மெரீனாவில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக தரப்பில் நேற்று தமிழக அரசிடம் வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் தமிழக அரசு மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க மறுத்துவிட்டது
இதனையடுத்து திமுக சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தது. அவசர வழக்காக பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நேற்றிரவு நடந்தது. பின்னர் இன்று காலை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இருதரப்பு வாதங்களும் முடிந்து சற்றுமுன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில், 'கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு வெளியானதை அடுத்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். மேலும் திமுக தொண்டர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com