தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது: வேதாந்தா கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஆலைக்கு தடை விதித்தது. இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்த தமிழக அரசின் ஆணை தொடரும் என்றும் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை இரண்டு வார காலம் நிறுத்தி வைக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. வேதாந்தா நிறுவனத்தின் இதுகுறித்த மனுக்களை தள்ளுபடி செய்து ’நாங்கள் பிறப்பித்த உத்தரவே இறுதி தீர்ப்பு’ என்றும் ’தீர்ப்பை தள்ளி வைக்க முடியாது’ என்றும் சென்னை ஐகோர்ட் உறுதியாக கூறி விட்டது.
இதனை அடுத்து சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தடை தொடரும் என்று சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை அடுத்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments