தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது: வேதாந்தா கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஆலைக்கு தடை விதித்தது. இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்த தமிழக அரசின் ஆணை தொடரும் என்றும் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை இரண்டு வார காலம் நிறுத்தி வைக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. வேதாந்தா நிறுவனத்தின் இதுகுறித்த மனுக்களை தள்ளுபடி செய்து ’நாங்கள் பிறப்பித்த உத்தரவே இறுதி தீர்ப்பு’ என்றும் ’தீர்ப்பை தள்ளி வைக்க முடியாது’ என்றும் சென்னை ஐகோர்ட் உறுதியாக கூறி விட்டது.

இதனை அடுத்து சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தடை தொடரும் என்று சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை அடுத்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

More News

'செம்பருத்தி' சீரியலின் பிரபலம் திடீர் மரணம்: கதறியழுத சீரியல் நடிகையின் வீடியோ

'செம்பருத்தி' சீரியலின் பிரபலம் ஒருவர் திடீரென மரணம் அடைந்து விட்டதை அடுத்து அந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் கண்ணீருடன் கதறி அழுத வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஜிவி பிரகாஷ் பட நாயகியின் டுவிட்டர் பக்கம் ஹேக்: பரபரப்பு தகவல்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்த நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பான்-இந்தியா படத்திற்காக பாலிவுட் இயக்குனருடன் கைக்கோர்த்த பிரபாஸ்: டைட்டில் அறிவிப்பு 

கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்திய மாஸ் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் பான்-இந்தியா திரைப்படங்களாக அதாவது பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களாக உள்ளன

விஜய், சூர்யா படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்: நிஷிகாந்த் காமத் குறித்து தமிழ் நடிகை தகவல்

பிரபல பாலிவுட் இயக்குனரும், தமிழில் மாதவன் நடித்த 'எவனோ ஒருவன்' என்ற திரைப்படத்தை இயக்கியவருமான இயக்குனர் நிஷிகாந்த் காமத் நேற்று காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ஊரடங்கு நேரத்தில் நடந்த அஜித் இயக்குனரின் மகன் திருமணம்!

இந்த ஊரடங்கு நேரத்தில் பல பிரபலங்களின் திருமணங்கள் சப்தம் இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.