50 மாணவர்களுக்கு திருக்குறள். சென்னை ஐகோர்ட் நீதிபதி வழங்கிய வித்தியாசமான தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,April 06 2017]

சென்னை ஐகோர்ட் நீதிபதி ஒருவர் சமீபத்தில் குற்றவாளி ஒருவருக்கு கருவேல மரங்களை அழிக்கும் தண்டனை கொடுத்த நிலையில் இன்னொரு தீர்ப்பில் 50 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
திருவள்ளுவரை சேர்ந்த முத்து என்பவர் சுடுகாட்டு பிரச்சனை தொடர்பாக ஒருவரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டி முத்து மனுதாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதனை மறைத்து வேறொரு வக்கீல் மூலம் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த முறைகேடு நீதிமன்றத்தின் கவனத்திற்கு மீண்டும் வந்தபோது நீதிபதி வைத்தியநாதன் முத்துவுக்கு ரூ.2500 அபராதம் அல்லது 2 நாள் சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இருந்தது. ஆனால் முத்து, தான் செய்த குற்றத்தை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதற்காக அவர் இருக்கும் பகுதியில் உள்ள 2 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்களுக்கு 50 திருக்குறள் புத்தகங்களை இலவசமாக வழங்க உத்தரவிட்டார். இந்த வித்தியாசமான தீர்ப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.