வேகமாகப் பரவும் மெட்ராஸ் ஐ- தவிர்ப்பது எப்படி? எளிய மருத்துவக் குறிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் 'மெட்ராஸ் ஐ' எனப்படும் வெண்படல அழற்சி நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘மெட்ராஸ் ஐ‘ நோய் குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள், நாள்தோறும் இந்நோய் தமிழகத்தில் 4,500 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் 80-100 பேர் தினமும் இந்த நேயால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் ஐ ஏற்படுவதற்கான காரணங்கள்
'மெட்ராஸ் ஐ' பெரும்பாலும் மழைக்காலங்களில் ஏற்படுகிறது.
வைரஸ் மற்றும் பாக்டீரியா பாதிப்பினால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிலும் குறிப்பாக அடினோ வைரஸ் எனும் கிருமியினால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
கண்ணின் கன்சங்டிவா என்ற விழிப்படலத்தில் ஏற்படும் இந்த நோய் சிறிதாக இருந்தாலும் முறையான சிகிச்சை இல்லாவிட்டால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் தன்மை கொண்டது.
ஏற்கனவே மெட்ராஸ் ஐ நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருளை மற்றவர்கள் பயன்படுத்தும்போது இந்த நோய் பாதிப்பு எளிதாக மற்றவர்களுக்குத் தொற்றிக் கொள்கிறது.
'மெட்ராஸ் ஐ' எனும் இந்த நோய்க்கும் மெட்ராஸ் எனும் இடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை. பெருந்தொற்று நோய் போல சென்னையில் அதிகளவு 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு ஏற்பட்ட போது இந்த நோய்க்கு மெட்ராஸ் ஐ எனப் பெயர் வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய் அறிகுறிகள்
கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுவது, நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் அழுக்கு ஏறி இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்
வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண் கூசுவது போன்ற உணர்வு ஏற்படும்
சிகிச்சை
'மெட்ராஸ் ஐ' நோய் சிறியதாக உணரப்பட்டாலும் அதற்கு முறையான சிகிச்சை அவசியம்.
கண் எரிச்சல், கண் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவரை அணுகுவது நலம்.
'மெட்ராஸ் ஐ'ஆல் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் மெடிக்கலுக்கு சென்று தன்னிச்சையாக ஆண்டிபயாட்டிக் மருத்துகளை வாங்கிச் சாப்பிடுகின்றனர். இது முற்றிலும் தவறு எனக் கூறும் மருத்துவர்கள் நோய் அறிகுறி தெரிந்தவுடனே மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே ஏதாவது ஒரு சொட்டு மருந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய பொருளைப் மற்றவர்கள் பயன்படுத்தி இருந்தாலோ அல்லது அவருடன் சமூக இடைவெளியின்றி தொடர்பு கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
'மெட்ராஸ் ஐ' ஆல் பாதிக்கப்பட்ட நபர்கள் பேப்பர் மற்றும் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
'மெட்ராஸ் ஐ' ஆல் பாதிக்கப்பட்டு இருக்கும்போது கண்ணுக்கு அழுத்தம் தரும் வகையில் செல்போன் பயன்படுத்தவோ அதிக நேரம் கணினி மற்றும் டிவி பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும்.
கண்ணிற்கு முற்றிலும் ஓய்வுக் கொடுக்க வேண்டும்.
'மெட்ராஸ் ஐ' ஆல் பாதிக்கப்பட்ட நபரின் கண்களில் இருந்து நீர் வடியும் சிக்கல் ஏற்படும்போது அவர் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments