நடிகை மடோனாவின் காதலர் ஒரு இசையமைப்பாளரா?
- IndiaGlitz, [Thursday,December 27 2018]
'பிரேமம்' படத்தில் செலின் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டியன், தமிழில் 'காதலும் கடந்து போகும், 'கவண்', மற்றும் 'பவர் பாண்டி' போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் 'கொம்பு வச்ச சிங்கமடா' என்ற தமிழ் படத்திலும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ராபி ஆபிரஹாமுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் 'சிலருடன் இருக்கும் போது மட்டும்தான் நாம் நாமாக இருக்கமுடியும். அது தான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது என அதிர்ஷ்டம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை வைத்து ராபி ஆபிரஹாம், மடோனாவில் காதலராக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
View this post on InstagramPost Christmas ?? days be like ?? #familytime
A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on Dec 27, 2018 at 12:07am PST
View this post on InstagramA post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on Dec 26, 2018 at 4:22am PST