விஜய் சேதுபதி-கே.வி.ஆனந்த் படத்தின் நாயகி இவர்தான்

  • IndiaGlitz, [Wednesday,June 08 2016]

கோ, அயன், அனேகன் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை அனேகன், தனி ஒருவன் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சமீபத்தில் வெளியான 'காதலும் கடந்து போகும்' படத்தில் ஜோடியாக நடித்த விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் ஜோடி மீண்டும் ஒன்றுசேரும் இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
'தனி ஒருவன்' உள்பட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிரண் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.
வரும் ஜூலை மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கின்றது.