தனுஷின் 'பவர்பாண்டி' படத்தில் இணைந்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Monday,October 24 2016]

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் ஜொலித்து வந்த தனுஷ் தற்போது இயக்குனர் துறையிலும் காலடி எடுத்து வைத்து இயக்கி கொண்டிருக்கும் படம் 'பவர் பாண்டி'.
ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தனுஷ் மற்றும் கவுதம் மேனன் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் 'காதலும் கடந்து போகும்' உள்பட ஒருசில படங்களில் நடித்திருக்கும் பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன் ரோல்டான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.