close
Choose your channels

பாலிவுட் செல்லும் மடோன் அஸ்வின்.. அதற்கு முன் தமிழில் ஒரு சம்பவம்.. ஹீரோ யார் தெரியுமா?

Monday, July 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு நடித்த ’மண்டேலா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு திரைப்படம் இயக்க இருப்பதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் செல்லும் முன்பே அவர் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த படத்தின் ஹீரோ யார் என்று குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

அரசியல் நையாண்டி கதையம்சம் கொண்ட ’மடோனா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனால் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பதும் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் மடோன் அஸ்வின் அடுத்த படம் பாலிவுட் படம் என்றும், இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் படத்தை இயக்குவதற்கு முன்பே மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், அனேகமாக சிவகார்த்திகேயனின் 25 வது படமாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், சுதா கொங்கரா இயக்கும் ’புறநானூறு’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் இந்த மூன்றில் சிவகார்த்திகேயனின் 25வது படம் எதுவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.