கீர்த்தி சுரேஷ் இடத்தை பிடித்த மடோனா செபாஸ்டியன்

  • IndiaGlitz, [Thursday,October 11 2018]

தளபதி விஜய்யின் 'சர்கார்' மற்றும் புரட்சி தளபதி விஷாலின் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களின் நாயகியான கீர்த்திசுரேஷ், தமிழின் முன்னணி நடிகையின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் நடிக்கவிருந்த ஒரு படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சுந்தரபாண்டியன்' படத்தை அடுத்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ள 'கொம்பு வச்ச சிங்கம்' என்ற படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க அதில் சசிகுமார் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கீர்த்திசுரேஷூக்கு பதிலாக மடோனா ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

சசிகுமார், மடோனா, சூரி, யோகிபாபு மற்றும் இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

சின்மயி 'மீ டூ' லிஸ்ட்டில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதை அடுத்து அவரை போலவே தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்த தகவல்களை சில பெண்கள் தைரியமாக கூறி வருகின்றனர்

சின்மயி-வைரமுத்து விவகாரம்: ஸ்வர்ணமால்யாவின் மெகா திட்டம்

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு தற்போது கோலிவுட் திரையுலகை மட்டுமின்றி தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்மயிக்கு ஆதரவு கொடுத்த பிக்பாஸ் 2 பிரபலம்

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் சின்மயிக்கு திரையுலகினர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

எங்கள் வீட்டு ஆண்தேவதை இவர்தான்: பிக்பாஸ் சுஜா வருனே

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கிய 'ஆண் தேவதை' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

ஜார்ஜியாவில் விஜய்சேதுபதி: 2300 கலைஞர்களுடன் படப்பிடிப்பு

விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தற்போது அவர் சிரஞ்சிவி நடித்து வரும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார்