மாஸ்க் அணிவதை கிண்டல் செய்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு பாசிட்டிவ்
- IndiaGlitz, [Sunday,April 12 2020]
மத்திய பிரதேச மாநிலத்தில் மாஸ்க் அணிவதை கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ வெளியிட்ட 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் டிக்டாக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் ஸ்டைலாக பைக்கின் மீது உட்கார்ந்து இருப்பார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். அதற்கு அந்த இளைஞர், ‘கடவுள் காப்பாற்றதை இந்த சின்ன துணி காப்பாற்று விடுமா? என்று கிண்டலாக கூறி, அவர் தன் கையில் இருந்த மாஸ்க்கை தூக்கி எறிவதாக அந்த வீடியோவில் காட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த டிக்டாக் இளைஞருக்கு சளி இருமல் ஆகியவை இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மாஸ்க் அணிந்து அனைவரும் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மாஸ்க் அணிவதை கிண்டல் செய்த அதே இளைஞர் தற்போது மாஸ்க் அணிந்து தனக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.