ஒரே இரவில் கோடீஸ்வரரான கூலித்தொழிலாளி: லாக்டவுன் நேரத்திலும் ஒரு அதிர்ஷ்டம்

  • IndiaGlitz, [Friday,August 07 2020]

மத்திய பிரதேச மாநிலத்தில் கூலித் தொழில் செய்து வரும் தொழிலாளி ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரரான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பன்னா என்ற பகுதியில் சுபல் என்ற கூலித்தொழிலாளிக்கு சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில் அவர் சமீபத்தில் சுரங்கம் தோண்டியுள்ளார். அப்போது அவருக்கு மூன்று வைரங்கள் கிடைத்தது

இந்த வைரங்களின் மதிப்பு ஒவ்வொன்றும் ரூபாய் முப்பது முதல் முப்பத்தைந்து இலட்சம் இருக்கலாம் என்பதால் அவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக மாறிவிட்டார். தனக்கு கிடைத்த வைரங்கள் குறித்து அவர் மாவட்ட வைர அலுவலகத்தில் தகவல் அளித்து அந்த வைரங்களை டெபாசிட் செய்து உள்ளார். இந்த வைரங்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்றும் ஏலம் விட்ட பின் 12 சதவீதம் வரி பிடித்தம் போக மீதி பணம் அவருக்கு அளிக்கப்படும் என்றும் மாவட்ட வைர அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படிப் பார்த்தாலும் அவருக்கு வரிப்பிடித்தம் போக சுமார் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த கூலித்தொழிலாளி ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிவிட்டதை அறிந்து அந்த பகுதி மக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் பலர் வேலையின்றி வருமானம் இன்றி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கூலித்தொழிலாளி ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது