முதல்முறையாக மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Saturday,July 25 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 13 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
அந்த வகையில் தற்போது முதல் முறையாக ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆம், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல் முறையாக ஒரு மாநில முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது