பிரதமர் மோடிக்கு கமல் கடிதம்: கிண்டல் செய்த பிரபல நடிகரின் மகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வரும் நிலையில் இந்த கடிதங்கள் குறித்து கிண்டலுடன் கூடிய ஒரு பதிவை பிரபல காமெடி நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுவரை தமிழக பிரச்சனைகள் குறித்து ஏழுமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இந்த கடிதங்கள் குறித்த பிரதமர் இதுவரை ஒரு கருத்து கூட தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் ’பிரதமர் மோடிக்கு நான் ஏழு முறை கடிதம் அனுப்பியும் அவர் ஒருமுறை படித்துப் பார்க்கவில்லை என்றும் பசுமாட்டுக்கு கிடைக்கும் மரியாதை கூட தமிழனுக்கு கிடைக்கவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டரில் கமெண்ட் அடித்து உள்ள பிரபல நகைச்சுவை நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மகளும் பாஜக பிரபலமான மதுவந்தி கூறியதாவது: ஐயா, நீங்கள் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் நம்மில் எவருக்கும் புரியவில்லை என்பதால் நீங்கள் எழுதியதை அவரும் புரிந்து கொள்ளவில்லை என்பதாக இருக்கலாம்’ என்று கூறியுள்ளார். மதுவந்தியின் இந்த டுவிட்டிற்கு பெரும்பாலான கண்டனங்களும், சில காமெடி கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன.
Sir maybe he didn’t understand what was written as most of the things you say aren’t understood by any of us @ikamalhaasan pic.twitter.com/j0K5fkMzPT
— Madhuvanthii (@YGMadhuvanthi) February 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments