8 ஆயிரம் கோடி வீடியோவுக்கு மன்னிப்பு கேட்ட மதுவந்தியின் வேறு சில கேள்விகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வெளியிட்ட வீடியோ ஒன்றில் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி செலுத்தியிருப்பதாக கூறியிருந்தார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்த நிலையில் தற்போது தனது தவறுக்கு மதுவந்தி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் அவர் கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் வெளியிட்டுள்ள வீடியோவில் 8,000 கோடி என்று நான் தவறுதலாக கூறி விட்டேன். அது ஒரு மனித தவறுதான். இருப்பினும் அவ்வாறு நான் கூறியிருக்கக் கூடாது. 8 கோடி என்று கூறுவதற்கு பதிலாக 8,000 கோடி என்று கூறிவிட்டேன். அந்த தவறுக்கு முழு பொறுப்பும் நான்தான். நான் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் நான் வெளியிடும் வீடியோக்களில் அந்த தவறு வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தன்னைக் கேலி செய்த நெட்டிசன்களுக்கு ஒரு சில கேள்விகளையும் எழுப்பி உள்ளார். அந்த வீடியோவில் அந்த ஒரு சிறு தவறை தவிர மற்ற அனைத்தையும் நான் சரியாகத்தான் சொல்லி இருந்தேன். ஆனால் நான் கூறிய மற்ற விஷயங்களையெல்லாம் வைரல் ஆக்காமல் நான் தவறாக கூறியதை மட்டும் எடுத்து வைரல் ஆக்கியது ஏன்? என்றும், ஒரு தவறு செய்தால் மட்டும் தான் நீங்கள் வைரலாக்குவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் பாண்டே சார் அவர்கள் எடுத்த பேட்டி ஒன்றில் ஒரு தலைவர் உளறினார் என்றும் அதை போல் மதன் அவர்கள் எடுத்த ஒரு பேட்டியிலும் இன்னொரு தலைவர் உளறினார் என்றும் அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டார்களா? என்றும் மதுவந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மேடைக்கு மேடை ஒரு தலைவர் பிட்டு பேப்பரை கையில் வைத்துக்கொண்டே உளறுகிறார், அதை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும், ஆனால் நான் என் தவறை ஏன் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கின்றேன் என்றால் நான் ஒரு ஹிந்து, நான் கடவுளுக்கு பயப்படுவேன் என்றும், கடவுளுக்கு பயப்படுபவர்கள் சத்தியத்திற்கும் பயப்படுவார்கள் என்று மதுவந்தி கூறியுள்ளார்.
மதுவந்தியின் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout