இது டிரைலர்தான் மெயின் பிக்சர் இனிமேல்தான்: மதுமிதா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, திடீரென தன்னைத்தானே காயப்படுத்தி கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் வெற்றி பெற தகுதியானவர்களில் ஒருவர் என்று கருதப்பட்ட மதுமிதா, வனிதாவின் ரீஎண்ட்ரிக்கு பின் முற்றிலும் மாறினார். வனிதாவின் பேச்சை கேட்டு ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள், பயன்படுத்துகிறார்கள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி சக போட்டியாளர்கள் மத்தியிலும், பார்வையாளர்களின் மத்தியிலும் மதிப்பினை இழந்தார்

இந்த நிலையில் தனக்கும், கவின்-லாஸ்லியா குரூப்புக்கும் நடந்த ஒரு சண்டையை வீடியோவாக பதிவு செய்துள்ள மதுமிதா, ‘8 பேர் எப்படி ராக்கிங் பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்பணம். இது டிரைலர் மட்டுமே, மெயின் பிக்சர் காண்பிக்கப்படவில்லை. பார்த்தால் நம கண்களும் கண்ணீர் குலமாய் மாறும்’ என்று பதிவு செய்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

‘ஹலோ டாஸ்க்கில் மதுமிதா சொன்ன கருத்து வேண்டுமானால் நியாயமானதாக இருக்கலாம், ஆனால் மதுமிதாவின் குணம் திடீரென மாற வனிதாவே முழுக்க முழுக்க காரணம். வனிதாவின் ரீஎண்ட்ரியால் மதுமிதா மட்டுமின்றி அபிராமி மற்றும் சாக்சி ஆகியோர்க்ளும் ஆவேசமாகி, அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி வெளியேறினார்கள் என்பதே உண்மை என சமூக வலைத்தள பயனாளிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.,