பாவனி-அபினய்யை சந்தேகப்படுறீங்கன்னா, அப்போ இவங்களை? கேள்வி எழுப்பிய மதுமிதா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் இருக்கும் என்பதும் ஆனால் அந்த காதல் அந்த சீசன் முடிந்தவுடன் காணாமல் போய் விடும் என்பதையும் பார்த்து வருகிறோம். முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாவது சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாவது சீஸனில் கவின் - லாஸ்லியா மற்றும் நான்காவது சீசனில் பாலாஜி - ஷிவானி ஆகியோர் காதல் செய்வதாக பரபரப்பாக பேசப்பட்டது என்பதும் ஆனால் ஒவ்வொரு சீசன் முடிந்த பிறகு அந்த காதல் காணாமல் போனது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த சீசனில் சுமார் 50 நாட்கள் வரை எந்த காதலும் இல்லை என்றாலும் அதன் பின் திடீரென அபினய் மற்றும் பாவனி இடையே காதல் என சக போட்டியாளர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டது. குறிப்பாக ஒரு டாஸ்க்கில், ராஜூ நேரடியாக அபினய் இடம், ‘நீ பாவனியை லவ் பண்றியா’ என கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்றைய புரோமோவில் அபினய் மற்றும் பாவனி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜூ மற்றும் சிபியிடம் பாவனி ஆவேசமாக சண்டை போடும் காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ள சமீபத்தில் எலிமினேட் ஆன மதுமிதா, ‘பாவனி மற்றும் அபினய் மணிக்கணக்கில் பேசுவதால் அவர்கள் உறவு குறித்து கேள்வி எழுப்புபவர்கள், இமான் அண்ணாச்சி மற்றும் ராஜு மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறாரே இந்த உறவை நீங்கள் என்னவென்று கூறுவீர்கள்? அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று கூறுவீர்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com