கொரோனா லாக்டௌனில் மதுமிதா செய்த காரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய ’பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் காமெடி நடிகை மதுமிதா. ’ஒருகல் ஒருகண்ணாடி’ என்ற படத்தில் ஜாங்கிரி மதுமிதா என்று பெயர் பெற்ற மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக இருந்தார். அதன் பின்னர் அவர் சில சர்ச்சைகளில் சிக்கி, ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்றதாக அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையிலும் ஒரு சில சர்ச்சைகளை பேட்டிகளை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் நடிகை மதுமிதா உருப்படியான ஒரு காரியத்தை செய்து முடித்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத இந்த கொரோனா விடுமுறையில் தான் பைக் ஓட்டவும், கார் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:
படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன். எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன்.
வீடியோ நாளை வெளியாகும்.
படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன்.
— Actor Madhumitha (@ActorMadhumitha) July 28, 2020
எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன்.
வீடியோ நாளை வெளியாகும். pic.twitter.com/X03XluoNwP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com