விஜய் டிவி கொடுத்த புகார் முற்றிலும் பொய்: மதுமிதா

பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட மதுமிதா, சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து விஜய் டிவி நிர்வாகம், மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தது. இந்த புகார் மனு மீது விரைவில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் மதுமிதா சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன், நிகழ்ச்சியில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டேன் என எனக்கு தெரியவில்லை. என்னை கேள்விகள் கேட்பதை விட அந்த தனியார் தொலைக்காட்சியிடம் கேட்டால் சரியான விடை உங்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்.

ஏற்கனவே தன்மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து தனக்கு சட்டப்பூர்வமாக காவல்துறையினர்களிடம் இருந்து போன் கால் எதுவும் வரவில்லை என்றும் அவ்வாறு காவல்துறையினர் அழைத்தால் தனது தரப்பை விளக்கத்தை அளிக்க தான் தயார் என்றும் மதுமிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

திரைத்துறையில் நன்றியே இருக்காது: இயக்குனர் அமீர்

விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களை தயாரித்த ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின் தயாரித்துள்ள திரைப்படம் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்'

கவினை முன்னாடி பிடிக்கும், இப்ப ரொம்ப பிடிக்கும்: லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் கவின் - அபிராமி காதல், கவின் - சாக்சி, லாஸ்லியா காதல், முகின் -அபிராமி காதல் என ஒருசில காதல்கள் தோன்றி கானல்நீர் போல் மறைந்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் கவின் - லாஸ்லியா காதல்

மீண்டும் இணையும் ராட்சசனின் ராசியான ஜோடி!

கடந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்று 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த த்ரில் சஸ்பென்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு,

'சாஹோ' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன

தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்? மதுமிதாவின் அதிரடி பேட்டி

மதுமிதா டாஸ்க் ஒன்றின்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாகவும், அதனையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்று பிக்பாஸ் விதிகளை மீறியதால் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.